‘வாகா’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 சிறப்புக் காரணங்கள்!

‘வாகா’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 சிறப்புக் காரணங்கள்!

முன்னோட்டம் 9-Aug-2016 10:29 AM IST Chandru கருத்துக்கள்

தேசிய விருது பெற்ற ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய ஜிஎன்ஆர் குமரவேலன், ‘வாகா’ படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். விக்ரம் பிரபு, ரன்யா ராவ் நடித்திருக்கும் இப்படம் சுதந்திர தினத்தை குறித்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதற்கான காரணங்களில் 5 சிறப்புக் காரணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்...

1. ‘கும்கி’ மூலம் அறிமுகமான நடிகர் விக்ரம் பிரபு, தனது அடுத்தடுத்த படங்களின் கதைகளைத் தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார். படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ... ஆனால், அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைக்களத்துடன் வித்தியாசமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த காரணம் ஒன்றே போதும், அவர் நடிக்கும் படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாய் இருப்பதற்கு!

2. ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை மையமாக வைத்து, போலீஸ் பின்னணியில் உருவாக்கப்பட்ட க்ரைம் த்ரில்லரான ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கியவர் ஜிஎன்ஆர் குமரவேலன். ‘வாகா’ மூலம் இப்போது ராணுவ வீரர்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு அழகான காதல் கதையோடு வந்திருக்கிறார். இதுவும் எதிர்பார்ப்புக்குரிய காரணங்களில் ஒன்று.

3. ‘மாணிக்யா’ என்ற கன்னட படம் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ரன்யா ராவ், ‘வாகா’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாயிருக்கிறார். மும்பை கிஷோர் நமித் கபூர் நடிப்புப் பள்ளியில் பயிற்சி பெற்ற இந்த மாடல் அழகி, ‘வாகா’ டிரைலர், பாடல்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாகப் பெற்றிருக்கிறார். முழுநீள வெண்திரையில் அவரைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

4. ‘வாகா’ என்பது இந்தியா & பாகிஸ்தான் எல்லைப் பகுதி. படத்தின் தலைப்புக்கேற்றபடி, நிஜ ராணுவப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பிரபுவின் ராணுவ நண்பர்கள் சிலரின் உதவியுடனும், மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் செல்வாக்கு மூலமும் இதனை சாதித்திருக்கிறது ‘வாகா’ டீம். இது ராணுவ பின்னணியில் அமைந்த படம் என்றாலும் படத்தில் காதல், சென்டிமென்ட், காமெடி என எல்லாம் கலந்த கலவையாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார் குமரவேலன்.

5. விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமான ‘கும்கி’ படத்தின் வெற்றிக்கு டி.இமானின் பாடல்களுக்கு பெரும் பங்குண்டு. அதனைத் தொடர்ந்து விக்ரமின் ‘வெள்ளக்காரதுரை’யிலும் ‘அம்மாடி உன் அழகு...’ என்ற சூப்பர்ஹிட் பாடலைக் கொடுத்தார் இமான். இப்போது, ‘வாகா’ படத்திலும் இமானின் பாடல்கள் ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;