நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

பிரபல நாடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

செய்திகள் 9-Aug-2016 10:10 AM IST VRC கருத்துக்கள்

பெரிய இடத்து பெண்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜோதிலட்சுமி! இந்த படத்தை தொடர்ந்து அனைத்து தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் ஹிந்தி படங்கள் என 300க்கும் மேறபட்ட படங்களில் நடித்தார் ஜோதிலட்சுமி! பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த ஜோதிலட்சுமி சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

பாலா இயக்கிய ‘சேது’ படத்தில் இடம்பெற்ற ‘கானா கருங்குயிலே…’ என்று துவங்கும் பாடலுக்கு நடனம் ஆடிய ஜோதி லட்சுமி, ‘ஜெயம்’ ரவி நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்பட்டி பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வந்த ஜோதிலட்சுமி உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணி அளவில் சென்னையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 68. ஜோதிலட்சுமியின் சகோதரி ஜெயமாலினியும் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர்! ஜோதிலட்சுமியின் மறைவு தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் பெரும் இழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;