‘கோலிசோடா’, ‘வஜ்ரம்’, ‘பசங்க’ உட்பட பல படங்களில் நடித்துள்ள கிஷோர் நடிக்கும் படம் ‘எதிர் கொள்’. அறிமுக இயக்குனர் ஆர்.ஐய்யனார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தென்னவன், சார்மிளா, காளி வெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய் கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘சினேகம் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பில் சி.பழனி ஆர். ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படம் குறித்து இயக்குனர் ஐய்யனார் கூறும்போது,
‘‘முழுக்க முழுக்க கிராமத்து கதையாக உருவாகி வரும் படம் இது. ப்ள்ஸ் டூ படிக்கும் மாணவனுக்கும் பத்தாவது படிக்கும் மாணவிக்குமான காதலை சொல்லும் கதை. ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம். அப்பா மகன் உறவு வெறும் ரத்தபந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாகவும் இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்ற உட்கருத்தை உள்ளடக்கிய படம் இது’’ என்றார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை பாண்டி அருணாச்சலம் கவனித்திருக்க, ஜூட் லினிக்கர் இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறதாம்!
‘இணைய தலைமுறை’ என்ற படத்தை இயக்கிய சுசி ஈஸ்வர் அடுத்து இயக்கும் படம் ‘தேடு’. ‘கிஷோர் சினி ஆர்ட்ஸ்’...
அறிமுக இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் அறிமுகம் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகன்...
‘வா டீல்’, ‘றெக்க’ ஆகிய படங்களை இயக்கியவர் ரத்தின சிவா. இவர் தனது மூன்றாவது படமாக ஜீவா நடிப்பில் ஒரு...