சென்னை வாசியானார் ‘ஒரு நாள் கூத்து’ ஹீரோயின்!

சென்னை வாசியானார் நிவேதா பெத்துராஜ்!

செய்திகள் 8-Aug-2016 11:28 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ஒரு நாள் கூத்து’. அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அசல் மதுரைக்கார பெண்ணான நிவேதா துபாயில் வசித்து வந்தவர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் நடித்ததன் மூலம் பரவலான கவனத்தை பெற்றிருக்கும் நிவேதாவுக்கு தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். இதனால் சென்னையிலேயே தங்க முடிவு செய்துள்ளார் நிவேதா பெத்துராஜ். ‘நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்றாலும் கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் மட்டுமே நடிப்பேன்’ என்று கூறும் நிவேதாவுக்கு பட எண்ணிக்கை முக்கியமில்லையாம்! ஏற்கும் கேரக்டர் பேசப்படணும், ரசிகர்களை கவர வேண்டும், என்பது மட்டும்தானாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;