‘லென்ஸ் பட’ இயக்குனருக்கு கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது!

‘லென்ஸ் பட’ இயக்குனருக்கு கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது!

செய்திகள் 8-Aug-2016 11:28 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த தெலுங்கு பட இயக்குநர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் பெயரில் ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்ந்தெடுத்து ‘கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது’ வழங்கி கெரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு ’லென்ஸ்’ என்ற ஆங்கில படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். வருகிற 12ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவிருக்கும் விழாவில் இவருக்கு இவ்விருது வழங்கபடவிருக்கிரது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொள்கிறார். கௌரவ விருத்தினர்களாக இயக்குனர் பிரியதர்சன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் சுஹாசினி மணிரத்னம் தனது தந்தை சாருஹாசன் எழுதிய சுயசரிதை ‘THINKING ON MY FEET’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடை நாடகத்தை இயக்குவிருக்கிறார். இதில் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி அருண் இணைந்து நடிக்கிறார்கள்.
இயக்குனர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தனது முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில் தான் அஜித் குமார் அறிமுக நாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இவரின் மறைவையொட்டி ‘கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் மெம்மோரியல் ஃபவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கி தொடந்து பல ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய இயக்குனரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;