அஜித் - ஷங்கர் படம் : மீண்டும் துவங்கும் எதிர்பார்ப்புகள்

‘எந்திரன் 2’விற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது

செய்திகள் 8-Aug-2016 10:47 AM IST Chandru கருத்துக்கள்

சினிமாவைப் பொறுத்தவரை யார்.. யாருடன், எப்போது கூட்டணி வைப்பார்கள் என்றே தெரியாது. ‘அஜித்தும் விஜய்யும் மீண்டும் சேர்ந்து நடித்தால்...?’, ‘கௌதம் இயக்கத்தில் விஜய் நடித்தால்...?’, ‘ஹரி படத்தில் கமல் நடித்தால்...?’ என அவ்வப்போது எதிர்பார்ப்பு பட்டாசுகளை மீடியா கொளுத்திக்கொண்டே இருக்கும். இவையெல்லாம் நடப்பதற்கு சாத்தியமில்லாத விஷயங்களெல்லாம் இல்லை. நேரம், காலம் கூடிவந்தால் எது வேண்டுமானாலும் நடக்கும். அப்படியொரு கூட்டணி எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் நீண்டகாலமாகவே சுற்றி வருகிறது. அது ‘அஜித் & ஷங்கர்’ கூட்டணி. இவர்கள் இருவரின் ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு, ‘அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி சேர்க்கிறார்கள்’ என்ற எதிர்பார்ப்புதான் றெக்கை கட்டி பறக்கும். இப்போது மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

‘எந்திரன் 2’வை முடித்துவிட்டு ஷங்கரும், ‘தல 57’ படத்தை முடித்துவிட்டு அஜித்தும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்து கொண்டிருப்பதாகத் தகவல். அஜித்திற்காக ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் த்ரில்லருக்கான ஒன்லைன் ஷங்கர் வசம் இருக்கிறதாம். அது அஜித்திற்கும் பிடித்துவிட்டதால், அதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தமுறை இந்த ‘மேஜிக்’ நிகழ்ந்தால் அதைவிட ‘தல’ ரசிகர்களுக்கு வேறென்ன பெரிய சந்தோஷம் இருக்க முடியும்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;