’தர்மதுரை’க்கு கிரீன் சிக்னல்!

தர்மதுரை ரிலீஸ் தேதி?

செய்திகள் 6-Aug-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் ‘தர்மதுரை’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து படத்தின் சென்சாரும் முடிந்துவிட்டது. இப்படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்தில் எந்த கட்டும் கொடுக்காமல், அனைவரும் பாரக்க கூடிய படமாக ‘தர்மதுரை’ அமைந்துள்ளது என்று படத்திற்கு ’யு’ சர்டிஃபிக்கெட்டும் வழங்கியிருக்கிறார்கள்! இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ’தர்மதுரை’ படக்குழுவினர் இப்படத்தை வருகிற 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளையும் செய்து வருகிறார்கள். ‘ஸ்டுடியோ 9’ சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் தமன்னா முதன் முதலாக் இணைந்து நடித்துள்ளார் என்பதும், தமன்னா சொந்த குரலில் பேசி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;