Direction : Premsai
Production : Photon Kathaas
Starring : Jai, Yami Gautam, Santhanam
Music : Karthik
Cinematography : Sathya Ponmar
Editing : Praveen Antony
இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரேம் சாய் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்’ எப்படி?
கதைக்களம்
பிடித்த வேலை கிடைத்தால் தான் வேலைக்கு போவேன் என்றிருக்கும் ஜெய், காதி கிராஃப்ட்டில் சேல்ஸ் கேர்ளாக பண்புரியும் யாமி கௌதமை பார்த்ததும் அவளை காதலிப்பதற்காக ‘கூரியர் பாய்’ வேலையில் சேருகிறார். யாமியை ஒரு தலையாய் காதலிக்கும் ஜெய் மீது யாமிக்கு காதல் வரும் நேரத்தில் ஜெய்யின் வேலையில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ஜெய், சமூக சேவகர் நாசரிடம் டெலிவரி செய்ய எடுத்துச் செல்லும் ஒரு கவரை கைபற்றுவதற்காக ரௌடி கும்பல் ஒன்று ஜெய்யை துரத்துகிறது. அந்த ரௌடி கும்பலிடமிருந்து தப்பிக்கும் ஜெய்க்கு அந்த கவர் மூலம், மருத்துவ துறையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு பெண்களின் கருவை களவாடி பணம் சம்பாதிக்கும் ஒரு டாக்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்த தகவல்கள் கிடைக்கிறது. அதன் பிறாகு அந்த கும்பலை கூண்டோடு ஒழிக்க காரணமாக இருக்கும் ஜெய்யின் வாழ்க்கையை எப்படி மாறுகிறது என்பது தான் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தின் கதை!
படம் பற்றிய அலசல்
இப்படத்தில் மெடிக்கல் துறையில் நடக்கிற சில தகிடுதத்தங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள். படத்தின் முதல் 45 நிமிடங்கள் ஜெய், யாமி கௌதம் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், சந்தானம், வி.டி.வி.கணேஷ் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் என ஜாலியாக பயணித்து. பிறகு கதையில் திருப்பம் ஏற்பட்டு அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு பயணிக்கிறது. ஆனால் அந்த கவரில் உள்ள விஷயம் என்ன என்பது படம் பார்ப்பவர்களுக்கு முன் கூட்டியே தெரிய வருவதால் படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது! இதை தவிர்த்திருந்தால் படத்தை இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம். ஜெய், யாமி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கிய இயக்குனர், அந்த கவருக்காக ஜெய்யை துரத்தும் ஆக்ஷன் காட்சிகளில் லாஜிக் விஷயங்களில் நிறையவே கோட்டை விட்டிருக்கிரார். இதை தவிர்த்துவிட்டு பார்த்தோமேயானால் ‘தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்’ பார்க்க கூடிய ஒரு படமாகவே அமைந்துள்ளது. சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது. இசை மற்றும் படத்தொகுப்பு பணிகள் சொல்லும் படியாக அமையவில்லை.
நடிகர்களின் பங்களிப்பு
ஜெய் காதல் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நிறைய நாட்கள் தயாரிப்பில் இருந்து வந்த படம் என்பதாலோ என்னவோ பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வரும் யாமி கௌதமின் தற்போதைய தோற்றத்திற்கும் இப்படத்தில் வரும் தோற்றத்திற்கும் நிறையவே வித்தியாசம்! ஆனால் அழகாக தோன்றி தன் பங்கை சிறப்பித்துள்ளார் யாமி! படத்தில் கலகலப்புக்கு பெரிதும் உதவிருப்பவர் கொரியர் பாயாக வரும் சந்தானம் தான். அவரது அதிரடி காமெடி வசனங்களை ரசிக்க முடிகிறது. ஏ.சி.மெக்கானிக் ஆக வரும் வி.டி.வி.கணேஷும் கலகலப்புக்கு கை கொடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் கருவை சூறையாடி பணமாக்கும் டாக்டராக வரும் அஷுதோஷ் ராணா, அவரது கூட்டாளியாக வரும் பிரேம் குமார், மருத்துவமனையில் நடக்கும் தில்லு முல்லுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தம்பி ராமையா ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
பலம்
1. விழிப்புணர்வை ஏற்படுத்தும் மெடிக்கல் கிரைம் பற்றிய திரைக்கதை
2. ஜெய்யின் அதிரடி ஆக்ஷன் மற்றும் சந்தானத்தின் காமெடி காட்சிகள்
பலவீனம்
1. கதையிலுள்ள சஸ்பென்ஸ் முன்பே தெரிந்து விடுவது!
2. அதிகபடியான லாஜிக் மீறல்கள்
3. ஒளிப்பதிவு தவிர்த்து பெரிதாக கை கொடுக்காத டெக்னிக்கல் விஷயங்கள்
மொத்தத்தில்
ஜெய்யின் அதிரடி ஆக்ஷன் மற்றும் சந்தானம், வி.டி.வி.கணேஷ் ஆகியோரின் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருப்பதால் இப்படம் ரசிகர்களை கவர வாய்ப்பிருக்கிறது.
ஒரு வரி பஞ்ச் : காலம் தாழ்த்தி ‘டெலிவரி’ செய்திருந்தாலும் ரசிக்கலாம்!
ரேட்டிங் : 4/10
‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’...