பழைய உற்சாகத்துடன் வீடு திரும்பினார் கமல்ஹாசன்!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்!

செய்திகள் 5-Aug-2016 10:50 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சில வாரங்களுக்கு முன் தன் வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததால் நடிகர் கமல்சாஹனுக்கு காலில் அடிப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு சில வாரங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் கமல்ஹாசன் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் பூரண குணம் அடைந்துவிட்டதால் இன்று காலை பழைய உற்சாகத்துடன் தன் வீடு திரும்பியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;