காலையிலிருந்து மாலைக்குள் நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘எதுகை’. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இப்படம் 2 மணி 8 நிமிடங்களில் ஒரே காட்சியாக படமாக்கப்பட்டுள்ளதாம்! ஒரே டேக்கில் படமாக்கப்படுவதற்கு இப்படக் குழுவினர் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அதே பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இதற்கான பயிற்சி மேற்கொண்டு திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் புனிதம் ராம் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் தமிழினி நடித்துள்ளார். இவர்களுடன் புதுமுக நடிகர்கள் விஸ்வா, பிரசாத், தீபிகா, ராஜமகேஷ், ஜேக்கப் அருண், பொதும்பு மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். விருத்தாசலம் அருகில் உள்ள வரதராஜன் பேட்டை பகுதியில் இப்படம் படமாகியுள்ளது. ‘லயன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தீபா பழனிகுமார், சி.ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மற்றொரு சிறப்பம்சமாக திருக்குறளின் காமத்துப் பால் பகுதியிலிருந்து 14 குறள்களை எடுத்து பாடலாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் எம்.ரமேஷ்குமார் இசை அமைத்துள்ளார். எம்.ஜி.ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஒரு சில இளைஞர்கள் இணைந்து புதிய முயற்சியில் உருவாக்கியிருக்கும் ‘எதுகை’ மிக விரைவில் திரைக்கு வருமாம்!
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி...