‘சரோஜா-2’ குறித்து வெங்கட் பிரபு அறிக்கை!

‘சரோஜா-2’ வெங்கட் பிரபு விளக்கம்!

செய்திகள் 4-Aug-2016 1:43 PM IST VRC கருத்துக்கள்

சென்னை-600028’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவ்ந்து வெற்றிபெற்ற ‘சரோஜா’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது என்றும் இப்படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஏ.ஜெ.ஸ்கந்த பிரியன் இயக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தில் கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறார் என்றும் ஒரு சில தினங்களுக்கும் முன் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்! அத்துடன் வேறு சில மீடியாக்களிலும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக வந்த தகவல்களில் சிறிதும் உண்மையில்லையாம்! இது குறித்து வெங்க்ட பிரபு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம் வருமாறு!

‘‘நான் தற்போது ‘சென்னை -28’ இரண்டாம பாகத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருந்து வருகிறேன். என்னுடைய வருங்கால படங்களை விரைவில் நான் ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கும் நிலையில் இப்படி ஒரு வதந்தி பரவி வருவது வேதனை தருகிறாது. ‘சரோஜா-2’ பற்றி நான் சிறிது கூட யோசிக்கவில்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் ‘சென்னை-28’ இரண்டாம் பாகத்தின் மீது தான் இருக்கிறது. எப்படி 2007 ஆம் ஆண்டு ‘சென்னை-28’ ரசிகர்கள் மத்தியில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியதோ அதே போல் 2016-ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும். 2007 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளும் தற்செயலாக லக்கி எண்னான ஒன்பதில் தான் முடிகிறது’’ என்று தனக்கே உரித்தான சென்டிமென்ட்டுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;