‘ஜோக்கர்’, ‘வாகா’வுடன் களமிறங்கும் ‘முடிஞ்சா இவன புடி’

‘முடிஞ்சா இவன புடி’ சென்சார் மற்றும் ரிலீஸ் ரிசல்ட்!

செய்திகள் 4-Aug-2016 1:30 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ பட புகழ சுதீப் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘முடிஞ்சா இவன புடி’. ‘ராக்லைன்’ வெங்கடேஷ் வழங்க, ‘ராம்பாபு புரொக்‌ஷன்ஸ்’ சார்பில் எம்.பி.ராம் பாபு தயாரித்துள்ள இப்படத்தில் சுதீப்புடன் கதாநாயகியாகநித்யா மேனன் நடித்துள்ளார். வில்லனாக ‘போக்கிரி’, ‘பூஜை’ ஆகிய படங்களில் நடித்த முகேஷ் திவாரி நடித்துள்ளார். இன்னொருவில்லனாக ‘எதிர்நீச்சல்’, ‘பாண்டியநாடு’ படங்களில் நடித்த சரத் லோகித்சுவா நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், சாய் ரவி அச்சுதாகுமார், லதா ராவ், சதீஷ், சாது கோகிலா, கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர். அனைத்து வேலைகளும் முடிந்த இப்படத்தின் பாடல்கள மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. இந்நிலையில் ரிலீசுக்கான முக்கிய வேலைகளில் ஒன்றான இப்படத்தின் சென்சாரும் முடிந்து விட்டது. ‘முடிஞ்சா இவன புடி’ படம் அனைவரும் பார்க்க கூடிய படமாக ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ள இப்பட குழுவினர் இப்படத்தை வரும் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதே தினம் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து ‘குக்கூ’ பட புகழ் ராஜு முருகன் இயக்கியுள்ள ‘ஜோக்கர்’ மற்றும் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள ‘வாகா’ ஆகிய படங்களும் ரிலீசாகவிருக்கிறது. ஒரே நாளில் எதிர்பார்ப்பில் இருக்கும் 3 படங்கள் வெளியாகவிருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;