அஜித்தின் 5 மணி நேர எக்சர்சைஸ்! : ‘AK 57’ பற்றிய புதிய தகவல்கள்

ஏழு மாத ஓய்வுக்குப் பிறகு ‘தல 57’ படத்தில் நடித்து வரும் அஜித், இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக தினமும் 5 மணி நேரம் எக்சர்சைஸ் செய்துள்ளாராம்

செய்திகள் 4-Aug-2016 11:42 AM IST Chandru கருத்துக்கள்

வீரம், வேதாளம் பட ஹிட் கூட்டணியை வைத்து ‘AK 57’ படத்தை துவங்கியுள்ளார் ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன். கிட்டத்தட்ட 35 வருடங்களாக, 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ் அஜித் படத்தை தயாரிப்பது இதுவே முதல்முறை. இதனால் படத்தின் பட்ஜெட் பற்றி எந்த அளவுகோலும் இல்லாமல், இயக்குனர் சிவாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களாம்.

அஜித்தின் மனைவியாக காஜல் நடிப்பது, இன்னொரு ஹீரோயினாக அக்ஷரா ஹாசன் நடிப்பது, பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுவது என ஏற்கெனவே இப்படம் குறித்த சில தகவல்களுடன் தற்போது மேலும் சில புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன. படத்தின் கதைப்படி, தமிழ்நாட்டில் நடக்கும் கொலைக் குற்றம் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஐரோப்பா சென்று விசாரணை செய்யும் ‘இன்டர்போல்’ அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிக்கிறாராம். படத்தில் வெளிநாட்டுக்கலைஞர்கள் பலரும் நடிப்பதாகக் கேள்வி.

‘வேதாளம்’ ரிலீஸுக்குப் பிறகு கிட்டத்தட்ட 7 மாத காலம் ஓய்விலிருந்த அஜித், உடல்நிலை தேறிய பின்பு ‘AK 57’ படத்திற்காக தினந்தோறும் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறாராம். இதனால் படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ‘தல’யின் ரிஸ்க் இப்படத்திலும் தொடரும் என்கிறார்கள்.

வோதளத்தைத் தொடர்ந்து ‘AK 57’க்கும் இசையமைக்கும் அனிருத், இப்படத்திற்காக 4 பாடல்களையும், ஒரு தீம் மியூசிக்கையும் உருவாக்கியுள்ளாராம். அதில் ஒரு பாடலை அக்ஷரா ஹாசன் பாடியிருப்பதாகவும் கேள்வி.

ஆடிப்பெருக்கன்று படப்பிடிப்பு துவங்கிய ‘AK 57’ படம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;