‘‘நயன்தாரா ‘திருநாள்’ படத்தின் பெரிய ப்ளஸ்!’’ - இயக்குனர் ராம்நாத்

நாளை வெளியாகவுள்ள ‘திருநாள்’ படத்தில் நயன்தாராவின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என இயக்குனர் ராம்நாத் கூறியுள்ளார்

செய்திகள் 4-Aug-2016 10:50 AM IST Chandru கருத்துக்கள்

இன்றைய தேதியில் தென்னிந்தியாவின் ‘டாப் மோஸ்ட் ஹீரோயின்’ என நயன்தாராவை தாராளமாகச் சொல்லலாம். சின்ன படம், பெரிய படம் என்ற கணக்கு பார்க்காமல் கதையின் தன் பங்களிப்பு எப்படி என்பதை பார்த்து பார்த்து தனக்கான படங்களை தேர்வு செய்து வருகிறார் நயன். அதனால்தான் அவரின் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைகின்றன. அந்தவகையில், நாளை (ஆகஸ்ட் 5) உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திருநாள்’.

‘பிளேடு’ என்ற ரவுடி கேரக்டரில் நடித்திருக்கும் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா கிராமத்துப் பெண் போன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க பாவாடை தாவணி, சேலையிலேயே நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் அவரின் பங்களிப்பு படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்படும் என ‘திருநாள்’ படத்தின் இயக்கனர் ராம்நாத் கூறியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் டிவி ‘நீயா நானா’ புகழ் கோபிநாத்தும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ - டீசர்


;