’மீண்டும் ஒரு காதல் கதை’ ரிலீஸ் தேதி மாற்றம்!

ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகவிருந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது

செய்திகள் 4-Aug-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் S.V.D. ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’மீண்டும் ஒரு காதல் கதை’ நாளை ( ஆகஸ்ட் 5 ) வெளியாகவிருந்தது. படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் படத்தை பார்த்தனர். அதன் பிறகு “ இந்த படம் நன்றாக வந்துள்ளது , ஒன்று இரண்டு வாரங்கள் தள்ளி சரியான தேதியில் வந்தால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெறும்’’ என்று கூறினர். இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை ஒன்றிரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

வால்டர் பிலிப்ஸ் , இஷா தல்வார் , நாசர் , தலைவாசல் விஜய் , அர்ஜுன் , வித்யு லேகா , வெங்கட் ஆகியோர் நடித்துள்ள இப்படம் மலையாள மாபெரும் வெற்றி பெற்ற ’தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீமேக் ஆகும். படத்திற்கு இசை ஜி.வி பிரகாஷ் குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;