சீனுராமசாமி ஒரு முட்டாள் என்று நினைத்தேன்! – பாலா

’தர்மதுரை’ விழாவில் சீனுராமசாமி குறித்து பாலா!

செய்திகள் 3-Aug-2016 5:12 PM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா முதலானோர் நடித்து சீனுராமசாமி இயக்கியுள்ள ‘தர்மதுரை’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ‘ஸ்டுடியோ 9’ சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்! ‘தர்மதுரை’ பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட்டார். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலா பேசும்போது,

‘‘என்னோட குருநாதர் பாலுமகேந்திராவிடம் இயக்குனர் சீனுராமசாமியும் பாடம் பயின்றுள்ளார். அப்போது சீனுராமசாமி சினிமாவை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்! ‘டேய் உனக்கு வேறு எதுவும் பேச தெரியாதா? சினிமாவை விட்டால் வேறு எந்த விஷயமும் இல்லையா?’ என்று நான் அடிக்கடி கேட்பேன்! ஒரு சில சமயங்களில் சீனுவை பார்த்து ஓடி ஒளிந்தும் கூட இருக்கிறேன். ஏன் என்றால் சினிமா பற்றியே பேசி வறுத்து எடுப்பான்! சில சமயங்களில் சீனு ஒரு முட்டாள், இவன் எப்படி சினிமாவுக்கு செட் ஆவான் என்று கூட நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அவன் இயக்கிய படங்களை பார்த்தப்போது அவன் ஒரு திறமைசாலி என்பதை புரிந்துகொண்டேன். அவனுக்காகவும், இப்படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷுக்காகவும் தான் நான் இவ்விழாவுக்கு வந்தேன்’’ என்று பாலா பேசியதும் அரங்கத்தில் அப்படியொரு சிரிப்பலை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;