அட்லியுடன் இணைந்த ‘பிரேமம்’ நிவின் பாலி!

அட்லி தயாரிக்கும் 2வது படத்தில் நாயகனாகியிருக்கிறார் ‘பிரேமம்’ புகழ் நிவின் பாலி

செய்திகள் 3-Aug-2016 5:05 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘தெறி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லி அடுத்ததாக யாருடன் இணையப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த வேளையில், சத்தமில்லாமல் நிவின் பாலியுடன் கோர்த்திருக்கிறார். ஆனால், இப்படத்தை இயக்கப்போவது அட்லி அல்ல, தயாரிப்பு மட்டுமே அவர்.

‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் அட்லி, அதன் முதல் தயாரிப்பாக தற்போது, ஜீவா நாயகனாக நடிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தெற’ படத்தை உருவாக்கி வருகிறார். நேற்றோடு அப்படத்தின் அனைத்துவித படப்பிடிப்பும் நிறைவடைந்து ‘ரேப்அப் பார்ட்டி’ கொண்டாடியுள்ளார்கள். அப்படம் முடிந்த கையோடு, தனது புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் அட்லி. அறிமுக இயக்குனர் சூர்யா பாலகிருஷ்ணன் இயக்கவிருக்கும் இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;