மீண்டும் ஆக்ஷனில் அசத்த வருகிறார் Jason Bourne

மீண்டும் ஆக்ஷனில் அசத்த வருகிறார் Jason Bourne

செய்திகள் 3-Aug-2016 4:56 PM IST Chandru கருத்துக்கள்

பிரபல நாவலாசிரியரான Robert Ludlum, Jason Bourne என்கிற ஓர் கதாபாத்திரத்தை மையாமாக வைத்து 12 நாவல்கள் எழுதியுள்ளார். இதை மையமாக வைத்து 1988 இல் தொலைக்காட்சி தொடராக உருவாக்கப்பட்டு, 2002 இல் 'Bourne Identity' என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. Jason கதாபாத்திரத்தில் Matt Damon தோன்றி அசதி இருந்தார். இதன் அடுத்தடுத்த பாகங்கள் 2004-இல் Bourne Supremacy மற்றும் 2007-இல் Bourne Ultimatum ஆகிய படங்களாக வெளிவந்தன! மூன்று படங்களிலும் Matt Damon தான் கதாநாயகன்! சில காரணங்களினால், 2012-இல் வெளியான நான்காவது Bourne Legacy படத்தில் Jason வேடத்தில் Jeremy Renner தோன்றினார்.

Jason Bourne (கதாபாத்திர பெயரே, படத்தின் தலைப்பு!) மீண்டும் Jason வேடத்தில், இந்த 5th தொடரில் தோன்றியுள்ளார். Paul Greengrass படத்தை இயக்கி, படத்தின் editor Christopher Rouse உடன் இணைந்து, இதன் திரை வடிவை அமைத்துள்ளார்.

C.I.A. பணியிலிருந்து Jason Bourne விடுபட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன! C.I.A. இயக்குநரான Robert Dewey (Tommy Lee Jones), மற்றொரு அதிகாரியான, Heather Lee (Alicia Vikander) என்பவரை, தலைமறைவாகிவிட்ட Jason-ஐ கண்டுபிடிக்குமாறு கட்டளை இடுகிறார்! முன்னாள் அதிகாரியான Nicky Parsons (Julia Stiles) கூட, Jason-ஐ தேடுவதாக அறிய வருகிறார், Heather! தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் இன்னும் விவரம் புரியாமல் தவிக்கும் Jason -ஐ வேட்டை ஆட, வேறு சிலரும் தேடுகின்றனர். எதிர்பாராத விதத்தில், எதிர்பாராத நேரத்தில் வெளிப்படுகிறார், Jason! பிறகென்ன? Action மயம்தான்!

120 million America Dollars செலவில் உருவாகியுள்ள இப்படம், 120 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்டது. Barry Ackroyd ஒளிப்பதிவு செய்துள்ளார். John Powell மற்றும் David Buckley ஆகிய இருவரும் இசை அமைத்துள்ளனர். Hansa Pictures இன் வெளியீடு, இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;