வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்கள் மூலம் தன்னை ஹீரோவாக மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட சந்தானம், சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்றிருக்கும் ‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் ‘ஹிட்’ நாயகன் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார். இந்த உற்சாகத்துடன் அவர் ‘கமிட்’ செய்து வரும் அடுத்தடுத்த படங்களும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது. அதில் முக்கியமான படம் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவிருக்கும் படம். அதோடு, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து, அறிமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா இயக்கத்தில் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சந்தானம். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நிஜ புலி ஒன்றும் முக்கிய வேடத்தில் நடிக்கிறதாம். அதோடு இப்படத்தில் 12 நிமிட கிராபிக்ஸ் காட்சிகளும் இடம்பெறவிருக்கிறதாம். இதற்காக சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கிராபிக்ஸ் வேலைகளை 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...