‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வாகா’. இப்படத்தில் விக்ரம் பிரபு எல்லை பாதுகாப்பு வீரராக நடிக்க, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக, கதாநாயகியாக ரான்யா ராவ் நடித்துள்ளார். ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நடைபெறும் அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகம்மது மற்றும் இராணுவ அதிகாரிகளின் பிரத்தியேக அனுமதி பெற்று ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரகிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தை தமிழகம் முழுக்க விநியோகம் செய்யும் உரிமையை ‘காஸ்மோ வில்லேஜ்’ சிவக்குமார் கைபற்றியுள்ளார். ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘மெட்ரோ’ உட்பட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த ‘காஸ்மோ’ சிவக்குமார் ‘வாகா’ மீது கொண்ட பெரும் நம்பிக்கையில் இப்படத்தின் விநியோக உரிமையை கைபற்றியிருப்பதாக சொன்னார். ‘விஜயபார்கவி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் பாலவிஸ்வநாதன் தயாரித்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...