தனது ஒவ்வொரு ஸ்டெப்பையும் திட்டமிட்டு எடுத்து வைக்கும் ‘ரெமோ’ படக்குழு, ஒவ்வொரு வேலையையும் ஆரம்பிக்கும் முன்பு முறையாக பூஜை போட்டு, அது முடிந்ததும் அனைவருக்கும் ‘பார்ட்டி’ வைத்து கொண்டாடி மகிழ்ந்து வருகிறது. டைட்டில் லுக் வெளியீட்டையே பிரம்மாண்டமாக நடத்தியே ‘ரெமோ’, டப்பிங் ஆரம்பத்தைக்கூட பெரிய அளவில் பூஜைபோட்டுத் துவங்கியது. தற்போது ‘ரெமோ’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துவிட்டதால், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ‘நன்றி’ தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றை எடுத்து கொண்டாடியுள்ளது. நேற்று ‘ரெமோ’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறதாம் இப்படத்தை தயாரித்திருக்கும் ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம். படம் உலகமெங்கும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...