துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து ‘8 தோட்டாக்கள்’

மிஷ்கின் உதவியாளர் இயக்கும் ‘8 தோட்டாக்கள்’

செய்திகள் 3-Aug-2016 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘துப்பாக்கி’, ‘கத்தி’ என ஆயுதங்கள் பெயர்களை கொண்ட படங்களின் வரிசையில் ‘8 தோட்டாக்கள்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரும், ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான ஸ்ரீகணேஷ் இயக்கும் இப்படத்தில் புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடிக்க, ‘மகேஷின்டெ பிரதிகாரம்’ மலையாள பட புகழ் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். ‘அவம்’, ‘கிரகணம்’ ஆகிய படங்களின் இசை அமைப்பாளரான கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பில் ‘பிக் பிரின்ட்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனமும் கை கோர்த்துள்ளது.
‘ஒரு துப்பாக்கியில் 8 தோட்டாக்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரு இலக்கை நோக்கி பயணிப்பதில்லை. மாறாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு இலக்கை நோக்கி தான் பயணிக்கிறது. இது தான் ‘8 தோட்டக்கள்’ படத்தின் ஒரு வரி கதை’ என்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்! பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘8 தோட்டக்கள்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் இப்படம் வெளியாகும் என்கின்றனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - டிரைலர்


;