2000 அடி உயர மலைப்பகுதியில் ‘பொட்டு’க்காக செட்!

‘பொட்டு’க்காக 2000 அடி உயர மலைப்பகுதியில் ஷூட்டிங்!

செய்திகள் 2-Aug-2016 1:40 PM IST VRC கருத்துக்கள்

பரத் கதாநாயகனாக நடிக்கும் ‘பொட்டு’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் சார்பொல் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘சவுக்கார் பேட்டை’ படத்தை இயக்கிய வடிவுடையான் இயக்கி வருகிறார். பரத்துடன் நமீதா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி நிகேஷ் ராம், சாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குனர் வடிவுடையான் கூறும்போது,

‘‘இது பரபரப்பான விறுவிறுப்பான ஒரு பேய் படமாக இருக்கும். மருத்துவ கல்லூரியின் பின்னணியில் சொல்லப்படும் கதை என்றாலும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்லி மலையிலும் நடைபெற்றது. ஆதிவாசிகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நடக்கும் காட்சிகளுக்காக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயர மலைப் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ஆர்யன் சம்பந்தப்பட்ட காட்சிகளை 10 நாட்கள் படமாக்கினோம். இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு வித்தியான அனுவபத்தை தரும். இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என்றார். இப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;