கதாநாயகியாக அறிமுகமாகும் கலையுலக வாரிசு!

சரிதா, விஜியை தொடர்ந்து லவ்லின்!

செய்திகள் 2-Aug-2016 1:31 PM IST VRC கருத்துக்கள்

ஏராளமான தமிழ் படங்கள், தெலுங்கு மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சரிதா! இவரது தங்கை விஜியும் சிறந்த ஒரு நடிகை! இவர் இன்னமும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர்! சரிதா, விஜியை தொடர்ந்து விஜியின் மகள் லவ்லின் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். சிறுவயது முதலே இவருக்கு நடிப்பின் மீதிருக்கும் ஆர்வத்தால் மும்பையிலுள்ள அனுபம்கேர் சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ளார் லவ்லின்! தற்போது துபாயில் மனோ தத்துவம் படிப்பை இறுதி ஆண்டு படித்து வரும் லவ்லின் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறதாம். இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நதிகள் நனைவதில்லை - டிரைலர்


;