‘இருமுகன்’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

கதாநாயகிகள் இல்லாமல் நடைபெற்ற ‘இருமுகன்’ விழா!

கட்டுரை 2-Aug-2016 1:17 PM IST VRC கருத்துக்கள்

‘அரிமா நம்பி’ பட புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா, ரித்விகா முதலானோர் நடித்துள்ள ‘இருமுகன்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை நடிகர்கள் சிவகார்த்தியேன், நிவின்பாலி ஆகியோர் வெளியிட்டனர்! ‘தமீன் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஷிபு தமீன் தயாரித்துள்ளார். விழாவில் ஷிபு தமீன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஷிபு தமீனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது,

‘‘இருமுகன்’ டிரைலரை பார்த்து பிரமித்து போனேன். நான் ‘ரெமோ’வில் நர்சாக நடித்திருப்பது குறித்து இங்கு பேசினார்கள். இந்த டிரைலரில் வரும் விக்ரம் சார் கேரக்டர்களை பார்க்கும்போது நான் எல்லாம் அபரண்டீஸ் தான். ஆனால் என்னோட வளர்ச்சியில் விக்ரம் சாருக்கு பெரிய பங்கு உண்டு. அவர் என்னை பார்க்கும்போதெல்லாம், ‘சிவா, உன்னிடம் திறமை இருக்கிறது. நீ நல்ல ஒரு நடிகர் ஆவேன்! தொடர்ந்து முயற்சி செய்’’ என்று ஊக்கப்படுத்திக் கோண்டே இருப்பார்! காலேஜ் கட் ஆடித்து அவர் நடித்த ’சாமி’ படத்தை பார்த்த நினைவுகளெல்லாம் இந்த மேடையில் வருகிறது. நான் ‘ரெமோ’வில் பணியாற்றும்போது பி.சி.ஸ்ரீராம் சார் சொல்லிகிட்டே இருப்பார், ‘விக்ரமுக்கு ‘ஐ’ படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று! ஆனால் இந்த அரங்கத்தில் அவருக்கு கிடைக்கிற கைதட்டல்களை பார்க்கும்போது இதற்கு ஈடு ஆகாது அந்த தேசிய விருது எல்லாம்’’ என்றார்.

நிவின் பாலி பேசும்போது, ‘‘ஒரு தமிழ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொளவ்து இது தான் முதல் முறை! அதுவும் நடிப்பில் தனி முத்திரைகளை பதித்த விக்ரம் சார் நடித்த பட விழாவில்! எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் விக்ரம் சார்! இப்படத்தை தயாரித்த ஷிபு தமீன், விகரம் சார், இயக்குனர் ஆனந்த் ஷங்கர் சார் உட்பட இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்’’ என்றார் நிவின் பாலி!

விக்ரம் பேசுகையில், ‘‘நான் நடித்த பெரும்பாலான படங்களையும் கேரளாவில் விநியோகம் செய்தவர் ஷிபு தமீன்! இப்போது அவரது தயாரிப்பில் இது போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘இருமுகன்’ டீம் அருமையானது! சுறுசுறுப்பான டீம்! என்னை விட வயது குறைவான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்ததும் வித்தியாசமான அனுவபமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் அவர் எடுக்கும் விதம் என்னை பிரம்மிக வைத்தது! வித்தியாசமான் ஒரு படமாக அமைந்துள்ளது ‘இருமுகன்’! இதற்கு மேல் நான் படத்தை பற்றி பேச விரும்பவில்லை! எல்லோரும் படத்தை தியேட்டரில் பாருங்கள்’’ என்றார்.

‘இருமுகன்’ தயாரிப்பாளர் ஷிபு தமீன் பேசும்பொது, ‘‘சாமி, கந்தசாமி என விக்ரம் சார் நடித்த பெரும்பாலான படங்களை கேரளாவில் நான் விநியோகம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் விக்ரம் சாரை வைத்து படம் பண்ணனும்னு ஆசை வரும்! அது இப்போது நிறைவேறி உள்ளது. விக்ரம் சாருக்கு என்னோட நன்றிகள்! அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்தது போலவே இப்படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, நித்யா மேனன் அனைவரும் இது தங்களோட சொந்த படம் என்ற வகையில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்தார்கள்! இத்தருணத்தில் அனைவருக்கும் நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்’’ என்றார்.

‘இரு முகன்’ இயக்குனர் ஆனந்த் ஷங்கர், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், நடிகர் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும், பிரபல கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா உட்பட பலர் பேசினார்கள். பிரம்மாணடமாக நடந்த இவ்விழாவில் படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளும் கலந்து கொள்ளாதது ஒரு குறையாகவே இருந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;