இருமுகன் - இசை விமர்சனம்

ஹாரிஸிடம் இருந்து இன்னொரு தரமான ஆல்பம்

இசை விமர்சனம் 2-Aug-2016 12:35 PM IST Chandru கருத்துக்கள்

சாமுராய், சாமி, அருள், அந்நியன், பீமா படங்களைத் தொடர்ந்து 6வது முறையாக விக்ரம் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். கெமிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள ‘இருமுகன்’ படத்தின் பாடல்களின் ‘கெமிஸ்ட்ரி’ எப்படி?

ஹெலனா...
பாடியவர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அபய் ஜோத்புர்கர், உஜ்ஜைனி ராய்
கூடுதல் குரல் : மெக் விக்கி, சரண்யா கோப்நாத்
பாடலாசிரியர் : கார்க்கி


ஹாரிஸின் வழக்கமான ஸ்டைலிஷ் இங்கிலீஷ் வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் இப்பாடல் ஹிப் ஹாப் ஸ்டைலில் ஒலிக்கிறது. ஏற்கெனவே சிங்கிள் டிராக் டீஸராக வெளிவந்து கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைத்துவிட்டதால் ஆல்பத்தின் முதல் பாடலே வசீகரிக்கத் தவறவில்லை. ‘உலகின் மொத்த காதலையும் உன் ஒருத்தி மீது பொழிவேன்!’ என கார்க்கியின் வரிகளில் ரொமான்ஸ் எக்கச்சக்கம்.

ஓ மாயா...
பாடியவர்கள் : என்சி காருண்யா, ரம்யா என்எஸ்கே
பாடலாசிரியர் : தாமரை


நீண்டநாட்களுக்குப் பிறகு ‘காக்க காக்க’ படத்தின் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ பாடலை கேட்ட சுகத்தைத் தந்து செல்கிறது இந்த ‘ஓ மாயா...’ பாடல். அந்தப் பாடலைப் போலவே இந்த ‘ஓ மாயா’வும் ரோடு டிராவல் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் உருவாகியிருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் விஷுவல்கள் பாடலுக்கு கூடுதல் கலரைத் தரும் என எதிர்பார்க்கலாம். காருண்யா, ரம்யா இருவரின் குரல் எனர்ஜியும் பாடலின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

கண்ணை விட்டு...
பாடியவர்கள் : திப்பு, பிரவீன் சாய்வி, ஸ்ரீமதுமிதா
பாடலாசிரியர் : கார்க்கி


ஆல்பத்தின் அற்புதமான மெலடிப் பாடல் இந்த ‘கண்ணை விட்டு..’. ஸ்டிரிங்ஸ், பியானோ, புல்லாங்குழல் என ஒவ்வொன்றின் இசையையும் தனித்தனி லேயர்களில் ஒலிக்கவிட்டு பாடலின் அழுத்தத்தை அதிகரித்துள்ளார் ஹாரிஸ். வரிகளின் ஆழமும், இசையில் இருக்கும் உணர்ச்சியும் பாடலோடு நம்மை கட்டிப்போடுகிறது. திப்பு, பிரவீன் சாய்வி, ஸ்ரீமதுமிதா மூவரின் குரல்களும் அற்புதம் படைத்திருக்கின்றன. ரிப்பீட் மோட் ரகம்!

இருமுகன் சேட்டை...
பாடியவர்கள் : கவிதை குண்டர் எம்சீ
பாடலாசிரியர் : கவிதை குண்டர் எம்சீ


‘ராப்’பையும் ‘ஹிப் ஹாப்’பையும் கலந்து கட்டி ஒரு எனர்ஜியான பாடலைத் தந்திருக்கிறார் ஹாரிஸ். எலக்ட்ரிக் கிடார் அதிரடிக்க கவிதை குண்டரின் குரலைக் கேட்கும்போது நம்மையும் அறியாமல் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. டீஸர், டிலைரின் பின்னணியில் பெரிய அளவில் கவனம் பெற்ற ட்யூன் ஒன்றை இப்பாடலின் இடையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த 4 பாடல்களோடு ‘ஃபேஸ் ஆஃப்’ என்றொரு தீம் இசையும் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதையும் நாம் ஏற்கெனவே டீஸர், டிரைலர்களில் கேட்டுக்கிறோம்.

மொத்தத்தில்... அறிவியல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘இருமுகன்’ த்ரில்லர் படத்திற்கான பாடல்கள் கேட்பதைவிட பார்ப்பதற்கு புதிய அனுபவத்தை தரலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;