‘போங்கு’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

தாஜ் இயக்கத்தில் ‘நட்டி’ நடராஜ் நடிக்கும் ‘போங்கு’ படத்தின் மோஷன் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

செய்திகள் 2-Aug-2016 11:33 AM IST Chandru கருத்துக்கள்

‘சதுரங்க வேட்டை’ மூலம் ரசிகர்கள் மத்தியில் நாயகனாக பெரிய வரவேற்பைப் பெற்ற ஒளிப்பதிவாளர் நடராஜன் தற்போது ‘போங்கு’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஆர்டி இன்ஃபினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரூஹி சிங் நாயகியாக நடித்துள்ளார். மகேஷ் முத்துஸ்வாமி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ‘ரோடு டிராவல்’ கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பை திண்டுக்கல், மதுரை, சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தாஜ்.

இன்று காலை ‘போங்கு’ படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அது தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;