‘லட்டு’ இயக்குனர், ‘துட்டு’ நாயகன் மீண்டும் கூட்டணி!

வெற்றி கூட்டணியான நடிகர் சந்தானம், டைரக்டர் மணிகண்டன், வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் கூட்டணியில் புதிய படம்!

செய்திகள் 2-Aug-2016 10:36 AM IST Chandru கருத்துக்கள்

தில்லுக்கு துட்டு மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நாயகன் சந்தானம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றி பட இயக்குனர் மணிகண்டன் - பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வாசன் விஷீவல் வெஞ்சர்ஸ் தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இந்த கூட்டணி இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை, ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் கமர்ஷியல் படமாக உருவாக்குகிறார்கள். கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள், படத்தின் தலைப்பு ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வருகிறது வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;