Exclusive : ‘S3’யைத் தொடர்ந்து ‘சாமி 2’

சாமி, அருள் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்

செய்திகள் 2-Aug-2016 10:13 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று வெளியிடப்பட்ட ‘இருமுகன்’ டிரைலரைத் தொடர்ந்து இன்று காலை படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை பிரம்மாண்டமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், திடீர் அறிவிப்பு ஒன்று மேடையில் வெளிவந்தது. அதாவது, தற்போது சூர்யாவை வைத்து ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வரும் ஹரி, அடுத்ததாக விக்ரமை வைத்து ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார். இந்த செய்தி அரங்கத்தை அதிரச் செய்தது.

புலி, இருமுகன் படங்களை தயாரித்துள்ள ஷிபு தமீன்ஸ் நிறுவனமே ‘சாமி 2’ படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. ஹரியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் நாயகி, மற்ற கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரங்கள் ஆகியோருக்கான தேர்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். ‘எஸ் 3’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் ‘சாமி 2’ படத்தின் வேலைகள் துவங்கும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;