ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.க்காக 9 பாடல்கள்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் படத்தில் 9 பாடல்கள்!

செய்திகள் 1-Aug-2016 3:57 PM IST VRC கருத்துக்கள்

‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘புரூஸ்லீ’, ‘கெட்ட பையன் இந்த கார்த்தி’ முதலான படங்களில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். ‘மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்! இப்படம் ஒரு மியூசிகல் சப்ஜெட் என்று கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெறுகிறதாம். இதில் 4 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி விட்டாராம். மற்ற பாடல்களின் வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்றும், கதாநாயகியாக நடிக்க ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;