வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை -600028’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் அவர் இயக்கிய ‘சரோஜா’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது என்ற தகவலை நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். ‘மங்காத்தா’ படத்தில் வெங்கட் பிரபுவுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஏ.ஜெ.ஸ்கந்த ப்ரியன் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் உண்டாம்! அவர்களுக்கான தேர்வு இப்போது நடந்து வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது. இப்பட்த்தின் கதையை சமரன் எழுத, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சரோஜா’விற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா, படத்தொகுப்பு செய்த பிரவீன் ஆகியோர் இப்படத்திலும் இனைந்து பணியாற்றவிருக்கிறார்கள். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து...