‘விழித்திரு’வில் 7 இசை அமைப்பாளர்கள்!

ஒரே இரவில் நடக்கும் கதை – விழித்திரு!

செய்திகள் 1-Aug-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கும் படம் ‘விழித்திரு’. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணான்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன், தெலுங்கில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்தவரும் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான நாகபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குனர் மீரா கதிரவன் கூறும்போது,
‘‘நான்கு வேறுபட்ட சம்பவங்களில் தொடர்புடைய மனிதர்கள் ஒரு புள்ளியில் இணைந்து தொடர்ந்து பயணிக்கும் கதை தான் ‘விழித்திரு’. கதை முழுவதும் ஒரு இரவில் சென்னையில் நடப்பது மாதிரி படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக டி.ராஜேந்தர், சுப்பிரமணிய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு அறிமுக இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா, அல்ஃபோன்ஸ் என 7 இசை அமைப்பாளர்கள் 6 பாடலகளை பாடியிருக்கிறார்கள். இறுதிகட்ட பணிகளில் இருக்கும் ’விழித்திரு’ விரைவில் ரிலீசாகும்’’ என்றார்.

‘மெயின் ஸ்ட்ரீம் சினிமா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மீரா கதிரவனும் அவரது நண்பர்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் மில்டன், ஆர்.வி.சரண் கவனித்துள்ளனர். கலை இயக்கம் - எஸ்.எஸ்.மூர்த்தி. எடிட்டிங் - கே.எல்.பிரவீன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;