‘அஜித் 57’ஐத் தொடர்ந்து ‘சிரஞ்சீவி 150’

அஜித்தின் 57வது படத்தில் நாயகியாகியிருக்கும் காஜல் அகர்வால், தற்போது சிரஞ்சீவியின் 150வது படத்திலும் நாயகியாகியுள்ளாராம்

செய்திகள் 1-Aug-2016 10:40 AM IST Chandru கருத்துக்கள்

தமிழில் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, ‘தல’ அஜித்துடன் ‘ஏகே 57’ படங்களில் நாயகியாகியுள்ள காஜல் அகர்வால் தற்போது சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கும் நாயகியாகியுள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் ரீமேக்காக உருவாகும் ‘சிரஞ்சீவி’ 150 படத்தின் நாயகியாக நடிப்பதற்கு அனுஷ்கா, நயன்தாரா, ஜாக்குலின் பெர்னான்டஸ் உட்பட பல நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இப்போது படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் தற்போது பிஸியாக நடந்துவரும் ‘சிரஞ்சீவி 150’ படத்தின் படப்பிடிப்பில் இம்மாத இறுதியில் காஜல் அகர்வால் கலந்துகொள்வார் எனத் தெரிகறது. தற்போது ‘அஜித் 57’ படத்திற்காக பல்கேரியா சென்றுள்ளார் காஜல்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைரா டீஸர்


;