ஸ்லோவேனியாவில் படப்பிடிப்பைத் துவக்கிய ‘AK 57’

ஸ்லோவேனியாவில் படப்பிடிப்பைத் துவக்கிய ‘AK 57’

செய்திகள் 1-Aug-2016 10:25 AM IST Chandru கருத்துக்கள்

ஜூலை இறுதியில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு பல்கேரியாவில் துவங்க உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். திட்டமிட்டபடி ‘ஏகே 57’ன் படப்பிடிப்பு நேற்று மாலை பல்கேரியாவிலுள்ள ஸ்லோவேனியாவில் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. உளவாளி சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக அஜித்குமார் நடிக்கிறார். படத்தின் நாயகி காஜல் அகர்வால், அஜித்தின் மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவரோடு சேர்த்து இன்னும் இரண்டு நாயகிகளும் இப்படத்தில் நடிக்கிறார்களாம். அவர்களில் ஒருவர் அக்ஷரா ஹாசன். அனேகமாக அக்ஷரா அடுத்த ஷெட்யூலில் ‘ஏகே 57’ டீமுடன் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

ஐரோப்பாவில் மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, அதன் பிறகு சென்னையிலும், ஒரு சில வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;