நூற்றாண்டு கால வரலாறு கொண்ட தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட சிறப்புப் பட்டியலில் இடம்பிடித்தவர் மணிகண்டன். தனது முதல் படத்திற்கே இரண்டு தேசிய விருகளைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் லாபம் தந்த படமாக அமைந்தது ‘காக்க முட்டை’. அவரின் அடுத்த படம் ‘குற்றமே தண்டனை’.
விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில பல திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்ட இப்படத்தை இம்மாதம் 25ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, தர்ஷன்...
இந்த வாரம் சீதக்காதி, மாரி-2, கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப் ஆகிய 6...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்துள்ள படம் ‘கனா’. இந்த படத்தை...