ரவிராகுல், கவின் கார்த்திக், ரீனா ராய், நிஷா, ஆலிஷா ஆகியோர் நடிக்கும் படம் ‘மாற்றான் தோட்டத்து மல்லிகா’. ‘கள்ளச்சாவி’ என்ற படத்தை இயக்கிய ராஜேஷ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படம் வீடியோ கேமரா அமைந்த ஆன்ட்ராய்டு செல்ஃபோனால் வரும் ஆபத்தை சொல்லும் படமாம்! காதலியுடனோ, மனைவியுடனோ அந்தரமாக இருக்கும்போது படம் பிடித்து வைத்துக்கொண்டு பின் வரும் நாட்களில் அதை பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறார்கள். சில நேரங்களில் அந்த செல்ஃபோன் தவறுதலாக காணாமல் போனாலோ அல்லது பழுதுபார்க்க தரும்போதோ அந்த வீடியோ காட்சிகளை காணும் நபர்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்! அப்படி பயன்படுத்தப்படும்போது இதனால் பாதிக்கப்படும் நபர்கள் தற்கொலை அல்லது கொலை செய்யப்படும் நிலைமைக்கு கூட ஆளாகுகிறார்கள். இந்த மைய கருத்தை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
எல்.பி.ஆர்.புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் கவனித்துள்ளார். ராஜ்பாஸ்கர் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...
‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்,...
‘கடல்புறா’, ‘நாகலிங்கம்’, ‘தேசிய பறவை’, ‘நடிகை’ உட்பட பல படங்களை இயக்கியிருப்பவர் பாபு கணேஷ்....