6 நாடுகளில் 6 பாடல்கள்! சென்னை டு சிங்கப்பூர்!

ஜிப்ரானின் இசை பயணம்!

செய்திகள் 30-Jul-2016 12:34 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கும் படம் ‘சென்னை டு சிங்கப்பூர்’. இப்படத்தில் புதுமுகங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பாடல்களை புதுமையான முறையில் வெளியிட முடிவு செய்துள்ளனர் இப்படக்குழுவினர்! இப்படத்தில் இடம் பெறும் 6 பாடல்களை ‘சென்னை டு சிங்கப்பூர்’ சாலை வழியாக சென்று 6 இடங்களில் வெளியிடவிருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி துவங்கும் இந்த இசை பயணம் சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியான்மர், தாய்லாந்த், மலேசியா நாடுகள் வழியாக பயணமாகி இறுதியில் சிங்கப்பூரில் முடிவடைகிறது. இது குறித்து இசை அமைப்பாள ஜிப்ரான் கூறும்போது,

‘‘சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வான் வழியாகதான் செல்ல முடியும் என்று பலரும் கருதி வருகிறார்கள். ஆனால் சாலை வழியாகவும் செல்ல முடியும் என்பதை இப்படத்தின் பாடல் வெளியீட்டு மூலம் பலருக்கும் தெரிய வரும். பாடல்களை வெளியிட நாங்கள் 20 நாட்கள் பயணமாக திட்டமிட்டுள்ளோம். ‘சென்னை டு சிங்கப்பூர்’ படத்தின் கதைக்கள்ம் புதுசு. படத்தில் பங்குபெறுபவர்களில் பெரும்பாலானவரும் புதியவர்கள். இதனால் பாடல்களை புதுமையான முறையில் வெளியிட நாங்கள் முடிவு செய்தோம். இந்த முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு எங்க படக்குழுவினருக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் ஜிப்ரான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;