‘ஜோக்கர்’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!

’குக்கூ’ ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’ ரிலீஸ் தேதி!

செய்திகள் 30-Jul-2016 10:57 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில் ‘சகுனி’ படத்தை தயாரித்த ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள் படம் ‘ஜோக்கர்’. ‘குக்கூ’ படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சமீபத்தில் சென்சாரில் அனைவரும் பார்க்க கூடிய படமாக ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தை வெளியிடும் வேலைகளில் ஈட்டுபட்டுள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தினர் ‘ஜோக்கர்’ படத்தை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ‘ஜிகர்தண்டா’ புகழ் குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அரசியல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான படமாக ‘ஜோக்கர்’ உருவாகியுள்ளது! ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் கார்த்தியின் ‘காஷ்மோரா’ படத்தின் இறுதிகட்ட லைகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;