’மீஞ்சூர்’ கோபி இயக்கத்தில் நயன்தாரா!

‘காக்க முட்டை’ சிறுவர்களுடன் நயன்தாரா நடிக்கும் படம்!

செய்திகள் 30-Jul-2016 10:34 AM IST VRC கருத்துக்கள்

‘காஷ்மோரா’, ‘இரு முகன்’ படங்களை தொடர்ந்து ‘டோரா’வில் நடிக்கும் நயன்தாரா, மீஞ்சூர் கோபி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். மீஞ்சூர் கோபி யார் என்றால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் கதை தனது என்று உரிமை கொண்டாடியதன் மூலம் பிரபலமானவர்! மீஞ்சூர் கோபி இயக்கும் பெயரிடப்படாத இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ‘காக்கா முட்டை’யில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகியோருடன் சுனுலட்சுமி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராமச்சந்திரன் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் நடைபெறவில்லையாம். விரைவில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் நடைபெறவிருக்கிறதாம். லால் குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்கும் இப்படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;