ஒரே நேரத்தில் உருவாகும் 2 ‘டியூப்லைட்’கள்!

அறிமுக இயக்குனரின் டியூப்லைட்!

செய்திகள் 29-Jul-2016 2:53 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கி, இசை அமைத்து, ஹீரோவாகவும் நடிக்கும் படம் ‘டியூப்லைட்’. ‘ஆஸ்ட்ரிச் மீடியா புரொடக்‌ஷன்’ சார்பில் ரவிநாராயணன் தயாரிக்கும்இப்படத்தில் கதாநாயகியாக தியா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், பிரவீன் பிரேம், வினோத், புஜ்ஜி பாபு, ரம்யா ஷங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘டியூப்லைட்’ படம் குறித்து இயக்குனர் இந்த்ரா கூறும்போது,

‘‘சராசரி கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு ஆண் தன்னை விட அழகும் அறிவும் அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்க, அவர்கள் இருவரின் வாழ்க்கையில் உள்ளே புகுந்து காய் நகர்த்துகிறார் ஒரு டாக்டர்! அது எங்கே போய் முடிகிறது என்பது தான் ‘டியூப்லைட்’டின் ஒரு வரி கதை. இந்த படத்தின் தலைப்பு கதையுடன் பயணிக்காமல் கதாபாத்திரங்களோடும் பயணிக்கும். அதனால் தான் படத்திற்கு ‘டியூப்லைட்’ என்ற பெயரை சூட்டினோம். ஆனால், பாலிவுட்டில் சல்மான கான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘டியூப்லைட்’ என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டோம்! அதுவும் ஒரு வகையில் எங்களுக்கு ஒரு விளம்பரம் தான்’’ என்றார். ‘டியூப்லைட்’டின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;