‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசர வைத்த அருண் விஜய், தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவங்கியுள்ளார். இப்படத்திற்குப் பிறகு கன்னடம், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வில்லனாக நடித்தும் அசத்தினார். அதோடு, அவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வா டீல்’ படமும் ரிலீஸுக்கான வேலைகளில் இருக்கிறது. மேற்கண்ட படங்களோடு, ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் மெடிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் ‘குற்றம் 23’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் அருண் விஜய். இது அவரின் 23வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘குற்றம் 23’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையளதங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2வது போஸ்டரை இன்று மாலை ட்விட்டரில் வெளியிடுகிறார் நடிகை த்ரிஷா
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...