கௌதம் இயக்கும் மல்ட்டி ஸ்டார் படத்தில் ஜெயம் ரவி?

கௌதம் மேனன் இயக்கத்தில் பிருத்வி ராஜ், சாய் தரண் தேஜ், புனித் ராஜ்குமார் ஆகியோர் நடிக்கும் மல்ட்டி ஸ்டார் படத்தில் ஜெயம் ரவியும் இணைந்துள்ளதாக தகவல்

செய்திகள் 29-Jul-2016 10:06 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை கௌதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் போதே, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் அவர் இரண்டு புதிய படங்களை இயக்குவதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் ஒன்று தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, மற்றொன்று ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் என்று கூறப்பட்டது

இந்த இரண்டு படங்கள் இல்லாமல் ‘ஒன்றாக’ என்ற பெயரில் மல்ட்டி ஸ்டார் படம் ஒன்றை கௌதம் மேனன் இயக்கவிருப்பதாகவும், அப்படத்தில் மலையாளத்திலிருந்து ப்ருத்விராஜ், தெலுங்கிலிருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார், ஹீரோயின்களாக அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும், தமிழுக்கான கதாநாயகன் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மல்ட்டி ஸ்டார் படத்தில் தமிழுக்கான நாயகன் கதாபாத்திரத்திற்கு ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் நான்கு ஹீரோக்களும் இணைந்து ‘ட்ரிப்’ ஒன்றிற்குச் செல்லும்போது, அங்கே நடக்கும் பரபரப்பான விஷயங்களை மையமாக வைத்துதான் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம் கௌதம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;