‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் வேலைகளைத் துவங்கிய கமல்ஹாசன்!

‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் வேலைகளைத் துவங்கியுள்ளார் உலகநாயகன்

செய்திகள் 29-Jul-2016 9:59 AM IST Chandru கருத்துக்கள்

‘தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு கமல் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜெட் வேகத்தில் துவங்கின. படத்தின் 50% காட்சிகளை ஒரே ஷெட்யூலில் அமெரிக்காவில் படமாக்கிவிட்டுத் திரும்பிய கமல், அடுத்த கட்டப் படப்பிடிப்பை இந்தியாவில் நடத்துவதற்கான வேலைகளில் பிஸியாக இருந்தார். திட்டமிட்டபடி எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், சற்றும் எதிர்பாராத வண்ணம், கமலின் காலில் பிராக்சர் ஏற்படவே மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலன் காரணமாக கமலை குறைந்தது ஒரு மாத காலமாவது ஓய்விலிருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால், ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பிற்கு தற்போது தற்காலிக ‘பிரேக்’ போடப்பட்டுள்ளது.

கிடைத்த இந்த இடைவெளியில், ஏற்கெனவே தயாராகி நீண்டநாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ரிலீஸ் வேலைகளை கமல் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் கமல் இணைந்து தயாரித்துள்ளதாக இப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்னும் சில தினங்களில் எதிர்பார்க்கலாம் என்கிறது கமலுக்கு நெருங்கிய வட்டாரங்கள். இந்த வருடத்திற்குள் ‘விஸ்வரூபம் 2’வை ரிலீஸ் செய்வதே கமலின் எண்ணமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;