சிம்புடன் நடிப்பதாக வந்த செய்தியை மறுத்த ஹன்சிகா!

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவுடன் ஹன்சிகாவும் நடிக்கிறார் என வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளார் ஹன்சிகா

செய்திகள் 28-Jul-2016 12:12 PM IST Chandru கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. வழக்கத்திற்கு சிம்பு நடிக்கும் இப்படம் மிக வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நாயகிகளில் ஒருவராக நடிக்கும் ஷ்ரியா சரண் சம்பந்தப்பட்ட படத்தின் முதல் ஷெட்யூல் திண்டுக்கல்லில் சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானியும் நடிக்கவிருக்கிறார் என செய்திகள் இணையதளங்களில் பரவி வந்தன. ஆனால், இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து, ‘இது வதந்தி... உண்மையில்லை!’ என ட்வீட் செய்துள்ளார் ஹன்சிகா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;