தெலுங்கில் ‘பாகுபங்காரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள படம் தமிழில் ‘செல்வி’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. வெங்கடேஷ், நயன்தாரா கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள மாருதி இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. வெங்கடேஷ் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் ஜெயகுமார், சம்பத், சௌகார் ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வெங்கடேஷ், நயன்தாரா நடித்து தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற படம் ‘லக்ஷ்மி’ இப்படத்தை தொடர்ந்து மீண்டும் வெங்கடேஷ், நயன்தாரா இணைந்து நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...