டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகும் எம்.ஜி.ஆர்.படம்!

புதிய தொழில்நுட்பத்தில் ரிக்‌ஷாக்காரன்!

செய்திகள் 28-Jul-2016 11:25 AM IST VRC கருத்துக்கள்

அன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ரிக்‌ஷாக்காரன்’. அதிரடி சண்டை காட்சிகள், காமெடி, காதல் சென்டிமென்ட் கலந்து 1971-ல் வெளியான இப்படத்தை ஆர்.எம்.வீரப்பனின் ‘சத்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது! இந்த படத்தை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கி மீண்டும் தமிழகத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி.மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘ஃபிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே.சோமு ஆகியோர்! எம்.ஜி.ஆர்.நடித்து, எம். கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தின் பெரும் வெற்றிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அமைந்த பாடல்களும் பெரும் பங்கு வகித்தது அனைவரும் அறிந்ததே! மறைந்த நடிகை மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகனான படமும் ரிக்‌ஷாக்காரனே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;