இன்று தனுஷுக்கு பிறந்த நாள்!

ஹேப்பி பர்த் டே தனுஷ்!

செய்திகள் 28-Jul-2016 10:50 AM IST VRC கருத்துக்கள்

2002-ல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் திரையுல்கில நடிகராக களமிறங்கியவர் தனுஷ்! இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனாக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட தனுஷ் பிற்காலத்தில் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களையும் எடுத்து அதிலும் வெற்றிகளை குவித்தார். தேசிய விருது உட்பட பல விருதுகள் இவரை தேடி வந்தன! பொதுவாக அந்நிய மாநிலத்து நடிகர்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளாத பாலிவுட் திரையுலகிலும் தனுஷுக்கு தான் நடித்த ’ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ ஆகிய படங்கள் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்தது! தமிழ், மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ள தனுஷுக்கு இப்போது ஒரு ஆங்கில படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருப்பது அவரது தனி திறமைக்கு கிடைத்த கௌரவமாகும்! ‘தொடரி’, ‘கொடி’ ஆகிய படங்களில் நடித்து முடித்து தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’யில் நடித்து வரும் தனுஷுக்கு இன்று பிறந்த நாள்! இந்த இனிய நாளில் தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்


;