1000த்திற்கும் மேற்பட்ட பேய்களை வேட்டையாடும் கோஸ்ட்பஸ்டர்ஸ்!

1000த்திற்கும் மேற்பட்ட பேய்களை வேட்டையாடும் கோஸ்ட்பஸ்டர்ஸ்!

செய்திகள் 28-Jul-2016 10:39 AM IST Chandru கருத்துக்கள்

பேய் படங்களை வரிசையாக களமிறக்குவதில், கோலிவுட்டிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல ஹாலிவுட் என வரிந்துகட்டிக் கொண்டு ஹாரர் படங்களை அள்ளித் தெளித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த வாரம் இரண்டு ஹாலிவுட் பேய் படங்கள் ரிலீஸாகின்றன. ஒன்று, ‘கான்ஜுரிங்’ புகழ் ஜேம்ஸ் வான் தயாரிப்பில் வெளிவரும் ‘லைட்ஸ் அவுட்’. மற்றொன்று ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’.

Ghostbusters படத் தொடரில் மூன்றாவது படமான இதை இயக்கியுள்ளவர் Paul Feig. Katie Dippold உடன் இணைந்து இதன் திரைக்கதையையும் உருவாக்கி உள்ளார், Paul Feig. Melissa McCarthy, Kristen Wiig, Kate McKinnon மற்றும் Leslie Jones ஆகியோர், New York நகரில், பேய் ஒட்டுவதை ஒரு தொழிலாக தொடங்குகிறார்கள். பேய் ஆராய்ச்சியாளர் Abby Yates (Melissa McCarthy) மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளரான Erin Gilbert (Kristen Wiig) ஆகிய இருவரும் பேய்களும் ஆவிகளும் இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள்! Jillian Holtzmann (Kate McKinnon) என்கிற ஒரு பொறியாளர், அவர்கள் இருவருடன் இணைகிறார். நான்காவது நபராக அவர்களுடன் சேர்ந்து கொள்பவர், Patty Tolan (Leslie Jones). Patty, New York நகரம் முழுவதும் அத்துப்படி! New York நகரின் Times Square இல் 1000த்திற்கும் மேற்பட்ட பேய்கள் உலா வர, இந்த நால்வரும் தாக்குதலுக்கு தயாராகிறார்கள்! இந்த நால்வர் அணியுடன் இறுதியாக இணைந்து கொள்பவர், Kevin Beckman (Chris Hemsworth).

116 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படம், சுமார், 144 million America dollars செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது. Theodore Shapario இசை அமைத்துள்ளார். Robert Yeoman ஒளிப்பதிவு செய்துள்ளார். Sony Pictures -ன் உருவாக்கம் இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;