வீரம், வேதாளம் என அடுத்தடுத்து இரண்டு சூப்பர்ஹிட் வெற்றிகளைச் சுவைத்த அஜித், சிவா கூட்டணி மீண்டும் ‘AK 57’ படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, முக்கிய வேடமொன்றில் நடிப்பதற்காக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். ஒளிப்பதிவுக்கு வெற்றி, இசைக்கு அனிருத் என ‘வேதாளம்’ டெக்னிக்கல் டீம் இப்படத்திலும் தொடர்கிறது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ள ‘AK 57’ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஐரோப்பாவில் இந்த வாரம் துவங்க உள்ளது. அஜித், காஜல் அகர்வால் உட்பட படத்தின் முக்கியமான குழுவினர் அனைவரும் ஐரோப்பா செல்கின்றனர். அங்கே முதலில் பல்கேரியாவில் படப்பிடிப்பை நடத்திவிட்டு, பின்னர் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இந்த முதல் ஷெட்யூலிலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும் எனவும் தெரிகிறது. விரைவில், அக்ஷரா ஹாசனும் ஐரோப்பா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...