நிஜ சம்பவங்கள் பின்னணியில் ‘பயம் ஒரு பயணம்’

டாக்டர் பரத் நடிக்கும் பேய் படம் ‘பயம் ஒரு பயணம்’

செய்திகள் 27-Jul-2016 4:49 PM IST VRC கருத்துக்கள்

‘உன்னைப் போல் ஒருவன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தோழா’ முதலான படங்களில் நடித்தவர் பரத். இதய நோய் மருத்துவரான பரத் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கிற படம் ‘பயம் ஒரு பயணம்’. அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கி வரும் இப்படத்தில் கதையின் நாயகியாக விசாகா சிங் நடிக்கிறார். மீனாக்‌ஷி தீட்சித் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் ஊரவசி, சிங்கம்புலி, ஜான் விஜய், முனீஸ் காந்த், யோகி பாபு ஆகியோரும் நடிக்கும் இப்படம் குறித்து கதாநாயகனாக நடிக்கும் பரத் கூறும்போது,

‘‘நான் மருத்துவராக பணிபுரியும்போது என் கண் முன்னே சில உயிர்கள் பிரிவதை பார்த்திருக்கிறேன். அப்படி உயிர் பிரிந்த ஆத்மாக்கள் என்னுடன் வந்து பேசுவது போல் நான் சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இது போன்ற நிஜ சமப்வங்கள் அனைவரது வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடும். அப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பயம் ஒரு பயணம்’. முழுக்க முழுக்க மனித உணர்வுகளை பற்றி பேசக் கூடிய இப்படத்தில் காமெடிக்கு கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை. இதனை முழுக்க முழுக்க ஒரு ஹாரர் படமாக உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் கருத்தாக இருந்து பல புதிய யுக்திகளை படத்தில் கையாண்டுள்ளோம். இப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும்’’ என்றார்.

‘ஆக்ட்டோஸ்பைடர் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் எஸ்.துரை, எஸ்,ஷண்முகம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஐ.ஆண்ட்ரூ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒய்.ஆர்.பிரசாத் இசை அமைக்கிறார். கார்த்திக் ராஜ்குமார் கலை இயக்கத்தை கவனிக்க, எல்.வி.கே.தாஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தோழா - டிரைலர்


;